உஷார் மக்களே... வடதமிழகத்தில் மிரட்டப்போகும் கனமழை!

 
வெதர்மேன்

 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப்ஜான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  தமிழகத்தில்  கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் மிகக் கொடூரமாக வாட்டி வதைத்து வந்தது.  இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  ஜூன் 1ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில்  இன்று வடதமிழகத்தில்  நல்ல மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.  

வெதர்மேன்

இன்று ஜூன் 5ம் தேதி புதன்கிழமை மாலையும், இரவும்  சென்னை மற்றும் சுற்றுப்புறங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய செம மழை பெய்யக்கூடும்.  மிக மிக எளிமையாகச் சொல்ல வேண்டும் எனில்  வட தமிழகம் இன்று மாலை அதிரப்போகுது எனப்  பதிவிட்டுள்ளார்.
புயல் காரணமாக  பெய்யும் மழை என்பதால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் மழை பெய்யலாம். கடந்த சில வாரங்களாகவே அதீத வெப்பம் காரணமாக வடதமிழக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த மழை இருக்கலாம் என எதிர்பார்க்கின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web