உஷார்!! தீவிரமாகும் ”பிபோர்ஜோய்” புயல்!! அடுத்த 5 நாட்களுக்கு மழை!

 
India Cyclone file

தமிழகத்தில் கோடை வெயில் குறையாத காரணத்தால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . ஜூன் 1ம் தேதி  கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் ஜூன் 7 ம் தேதிக்கு மாற்றப்பட்டு பின்னர் ஜூன் 12ம் தேதிக்கு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

அசானி புயல்

ஜூன் 7ம் தேதி காலை 8.30மணிக்கு  மத்திய கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை பெற்று பின்   பிபோர்ஜாய் என்னும் தீவிர புயலாக வலுபெற்றுள்ளது.  இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து  மத்திய கிழக்கு  அரபிக்கடல் பகுதிகளில் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில்   நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

புயல்

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்   மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான 'பிபோர்ஜாய்' புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது; அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தொடர்ந்து வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும் இதனால் தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல்  5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web