உற்சாகம்... அடுத்த 3 மணி நேரத்திற்கு அடித்து ஊற்றப்போகும் மழை!

 
இடி மின்னல் மழை

 தமிழகத்தின்  பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக   சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் இன்று அதிகாலை சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக  சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர்,மீனம்பாக்கம் விமான நிலையம், அடையாறு, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆயிரம் விளக்கு, நந்தனம்  பகுதிகளில் லேசான மழை பெயத்து.

வெயில் , மழை

நாள் முழுவதும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்கி கொளுத்திய நிலையில்  பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இருப்பதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web