சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை!!

 
வெயில் மழை

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்றும் நேற்று முன் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மாலை நேரங்களில் கடந்த 2 தினங்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.  நகரின் ஒரு சில இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.  சில நிமிடங்கள் பெய்த லேசான மழையும் சூட்டை கிளப்பிவிட்டன. இந்நிலையில் சென்னையில் காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை மெரினா,தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை ,சென்ட்ரல், புரசவைவாக்கம், எழும்பூர், சிந்தாரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், பெரம்பூர், கோயம்பேடு, மதுரவாயல் உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோடை மழையால் சென்னைமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 5ம் தேதி நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி   மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவி வருகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக மாறக்கூடும். 

மழை
  அதே நேரத்தில்  தமிழகத்தின்  மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று   வீசக்கூடும்.  

மழை

கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் .  வடக்கு கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில்   மணிக்கு 40 முதல் 50 கிமீ  வேகத்தில் வீசக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web