பத்திரமா இருங்க மக்களே... தமிழகத்தின் இந்த பகுதிகளில் மீண்டும் கனமழை... வெதர்மேன் அலெர்ட்!

 
மழை கனமழை வெதர்மேன்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்தது. தற்போது இதன் மீதமிருக்கும் ஆட்டம் மீண்டும் நேற்று முதல் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்  நேற்று  டிசம்பர் 30ம் தேதி திங்கட்கிழமை  ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று முதல்  ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில்  தமிழகத்தில் நாளை முதல் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்  தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” இன்று மாஞ்சோலை மலைப்பகுதி, ஊத்து, நாலுமூக்கு ஆகிய பகுதியில் கனமழை பெய்யும்.நாளை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்” என பதிவிட்டுள்ளார்.  அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் எந்தெந்த இடங்களில் அதிகமான மழைபதிவாகியுள்ளது என்பதற்கான விவரத்தையும்  வெளியிட்டுள்ளார்.

வெதர்மேன்

அதில், ” டிசம்பர் 30ம் தேதி காலை 8.30 மணி முதல் டிசம்பர் 31ம் தேதி காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 140 மில்லி மீட்டரும், நாலுமூக்கு பகுதியில் 128 மில்லி மீட்டரும், ககாச்சி பகுதியில் 118 மில்லி மீட்டரும்,மாஞ்சோலை பகுதியில் 102 மில்லி மீட்டரும்” மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  இந்த பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web