FACT CHECK: கன்னியாகுமரியில் “MODI AGAIN" பலூன்கள் பறக்கவிடப்பட்டதா?

 
மோடி பலூன்

  
பிரதமர்  மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தொடர்ந்து 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.  விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்த  மோடி  ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றார்.  கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 3 நாட்கள் தியானத்தை முடித்தார்.  பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை சமயத்தில்  “இனிமே கருப்பு பலூன் எல்லாம் விட முடியாது Only MODI AGAIN.  400 PAAR MODI SARKAR” என்ற கேப்ஷனுடன் புகைப்படம் மற்றும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தின் மேலே “MODI AGAIN” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ராட்சத விமானம் வடிவிலான பலூன்கள் பறக்கவிட்டப்பட்டதாக வீடியோக்கள் புகைப்படங்கள் காட்டப்பட்டன.  


“MODI AGAIN” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ராட்சத விமானம் வடிவிலான பலூன்கள் பறப்பது போன்று பரவிய செய்திகளின் உண்மை தன்மை குறித்து ஆராய முற்படுகையில்  அவ்வாறாக எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து,  வைரலான காணொலியின்  உண்மை குறித்த ஆய்வில்  ராட்சத பலூன்களின்  நிழல் கீழே உள்ள மண்டபத்தின் மீது விழவில்லை என்பது தெரிய வந்தது.
 இதே போன்று Welcome to Nilgiris” என்று எழுதப்பட்டிருந்த ராட்சத பலூன்கள் மலை மேல் பறப்பது போன்ற காணொலியை அமைச்சர் எல். முருகன் தனது இன்ஸ்டாவில்  பதிவிட்டுள்ளார். அதேபோன்று, தாமரை சின்னம் மற்றும் “L Murugan for Nilgiris” என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் பறப்பது போன்ற காணொலியையும் தனது ட்விட்டரில்   பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த காணொலி  கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.  


மேலும் கன்னியாகுமரியில் இவ்வாறான நிகழ்வு நடைபெற்றது குறித்து பத்திரிகையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலின்போது அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி  வடசேரி பேருந்து நிலையத்தில் ஹீலியம் பலூன் பறக்கவிடப்பட்டது. இந்த பலூன்  வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மட்டுமே எனக் கூறினர். இதனால் வைரலாகும் காணொலி போல்   நிகழ்வு கன்னியாகுமரியில் எங்கும் நடைபெறவில்லை” எனவும் தெளிவாகிறது.   

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web