குவைத் தீவிபத்து... மோடி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ2லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பு!

 
குவைத் மோடி

 குவைத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உடனடியாக  நிவாரண பணிகளை மேற்பார்வையிடுவதற்கும் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு அனுப்புவதை விரைவுப்படுத்தவும்  வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் விரைவதாக தெரிவித்துள்ளார்.  அதே நேரத்தில் உயிரிழந்த  இந்திய குடிமக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ2லட்சம்  கருணைத்தொகை வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

குவைத்

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதில் 41 பேர் இந்தியர்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில்  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர் இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் மற்றும் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலரும் இந்த தீ விபத்தில் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. பலர் பலத்த காயம் அடைந்தனர். குவைத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 


கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் ஊழியர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மங்காஃப் பிளாக் 4ல் உள்ள NBTC நிறுவன ஊழியர்கள் இந்த கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இந்த கட்டிடம் மலையாள தொழிலதிபர் கே.ஜி.ஆபிரகாமுக்கு சொந்தமானது. நேறு அதிகாலை 4 மணியளவில் இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவல்கள் தொழிலாளர் முகாமின் சமையலறையில் இருந்து தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் பயங்கர தீ விபத்து; 41 பேர் பலி, பலர் படுகாயம்!

இந்த விபத்தில் தீக்காயமடைந்தவர்கள் அதான், ஜாபர் மற்றும் முபாரக் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரைத்தளத்தில் தீப்பற்றியதைக் கண்டு பலர் உயிர் பிழைக்க மேல் தளத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்.

இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சியைத் தருகிறது. மேலும் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சைப் பெற்று வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்திய தூதரகம் தயார் நிலையில் உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பந்தமான மற்ற வகையான  உதவி தேவைப்படுவோர் +965-65505246 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!