இன்று குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மோடி!

 
மோடி
 


டெல்லியில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முக்கிய தலைவர்கள் டெல்லியில் குழுமியுள்ளனர். அதன் பின்னர் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மோடி நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மோடி

மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. 
எனவே, 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், இன்று மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன் பின்னர் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர். நாளை மறுதினம் ஜூன் 9ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web