மோடி ஒரு சிறந்த பிரதமர், நல்ல நண்பர்... அதிபர் ட்ரம்ப்!

 
மோடி ட்ரம்ப்
 


 
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வரிவிதிப்பு விவகாரத்தில் பதற்றநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில்  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடனான தனது உறவுகள் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் ” இந்தியா ரஷ்யாவிடம் இருந்து  அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவது தனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. 

ட்ரம்ப் புதின்

ஆனால் தான் எப்போதும் பிரதமர் நரேந்திர மோடியுடன் நட்பாக இருப்பேன், அதில் பிரச்சினை இல்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  தற்போதைய பதற்றம் இருந்தபோதிலும், மோடியும் நானும் நண்பர்களாகவே இருப்போம் , ”அவர் ஒரு சிறந்த பிரதமர். அவர் சிறந்தவர், ஆனால் அவர் இப்போது செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

ட்ரம்ப்

இரு நாடுகளுக்கும் இடையே சில நேரங்களில் இதுபோன்ற தருணங்கள் வருவதால் இதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை” எனக் கூறியுள்ளார்.  இந்திய – சீன உறவு குறித்து பதிவிட்ட ஒருநாள் கழித்து இந்தியாவையும் மோடியையும் புகழ்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?