குமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் மோடி... புது வீடியோ வெளியானது!

 
மோடி


கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யும் புதிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர், விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றவர், அங்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி  ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வழிபட்டார்.

அதைத் தொடர்ந்து விவேகானந்தரின் முழு உருவச் சிலைக்கு மலர் தூவி வழிபட்டு இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி தனது தியானத்தை தொடங்கினார்.
இரண்டாவது நாளான இன்று காலை பிரதமர் மோடி காவி உடையில், சூரிய பகவானை தரிசித்து வழிபடுவது, பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.நாளை ஜூன் 1ம் தேதி வரை பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட உள்ளார். நாளை 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!