மோடி ஒடிசாவில் வாகனப் பேரணி... நாளை முதல்வர் தேர்வு!

 
பிரதமர் மோடி

 இந்தியா முழுவதும் நடத்தி முடிக்கப்பட்ட மக்களவைத்  தேர்தலுடன் சில மாநிலங்களில்  சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 147 சட்டசபை தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்துடன்  காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன இந்நிலையில்   ஒடிசாவில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைக்க உள்ளது. ஜூன் 12ம் தேதி புதன்கிழமை நாளை மறுநாள் இரவு 8 மணிக்கு  ஜனதா மைதானத்தில் ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்களின்  பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

இந்நிலையில், ஒடிசாவின் புதிய முதலமைச்சராக  யாரை தேர்தெடுப்பது என்பது குறித்து பா.ஜ.க. தேர்வு குழு நிர்ணயிக்கும். இந்தத் தேர்வுக்குழுவில்  மத்திய அமைச்சர்கள்  ராஜ்நாத் சிங், புபேந்திர யாதவ் ஆகியோரை பாஜக தலைமை நியமித்துள்ளது. நாளை நடைபெற உள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதலவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  முதன்முறையாக ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பதால் முதல்வர்  பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதற்கு முன்  பிரதமர் மோடி அம்மாநில தலைநகரில் வாகன பேரணி நடத்துகிறார். இந்த பேரணி ஜெயதேவ் விஹாரில் தொடங்கி புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா நடைபெறும் இடமான ஜனதா மைதானம் வரை நடைபெறும் என பாஜக அரசியல்  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பதவியேற்பு விழாவில் பிரதமருடன் பாஜக ஆட்சி செய்யும் முதல்வர்கள் உட்பட பல அரசியல்  கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web