மோடி ராஜினாமா ?

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளிலும், “INDIA” கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவு மிக மிக முக்கியம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனையடுத்து மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் காலை 11 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது.
நேரு தான் 3 முறை தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடித்தார். தற்போது மோடி அதை சமன் செய்கிறார். ஆனால், இதுகுறித்து பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. இக்கூட்டத்திற்குப் பின் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மொத்த அமைச்சரவையையும் கலைத்துவிட்டு கூட்டணி கட்சிகளுடன் தே.ஜ. கூட்டணி புதிய அமைச்சரவையை அமைக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!