மோடி 3 வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.... கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

 
மோடி

 பிரதமர் மோடி இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்றுள்ளார்.  அவருடன், முதல்கட்டமாக 30 பேர் மத்திய  அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.  மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்ற போதிலும்  272 தனிப் பெரும்பான்மை  கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3வது முறையாக பிடித்துள்ளது.  பாஜக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில்  பிரதமராக  மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இதையடுத்து,  திரௌபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7.15 மணிக்கு  பதவியேற்பு விழா நடைபெற்று முடிந்துள்ளது.  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மோடிக்கு பிரதமராக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ், மொரீஷியஸ் உட்பட பல்வேறு  நாடுகளின் தலைவர்கள் , உட்பட 8000விவிஐபிக்கள் கலந்து கொள்கின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web