48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில் சேவை... செப்டம்பர் 13ம் தேதி மோடி தொடங்கி வைப்பு!

 
மிசோரம்
 


 இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தற்போது தான் மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதனை  அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். இந்த ரயில் நிலையம் சாய்ராங் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ரயில் பாதை 48 சுரங்கங்கள் வழியாகவும் 53 பாலங்கள் வழியாகவும் செல்லும் வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

மிசோரம் மாநிலம் ஐஸ்வால் பகுதியில் நடைபெற்ற மாநில காவல் துறை சேவை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் லால்துஹோமா  உரையாற்றினார். அந்த உரையில்  ''பைராபி - சாய்ராங் பகுதிகளுக்கு இடையிலான அகல ரயில் பாதையானது, 51.38 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ரயில் நிலையம் சாய்ராங் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் அமையவுள்ளது. இதற்கான பணிகள் 2008 -2009 ஆண்டில் தொடங்கப்பட்டது.  ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை ஓட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில்  செப்டம்பர் மாதம் முதல் பணிகள் சேவை தொடங்கும். இதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 12ம் தேதி மிசோரத்திற்கு வருகை தருகிறார்.  செப்டம்பர்  13ம் தேதி ரயில் நிலையத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவின் வேறு எந்த ரயில் பாதையும் கொண்டிருக்காத வகையில் 48 சுரங்கள் வழியாகவும், 53 முக்கிய பாலங்கள் வழியாகவும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் உயர்ந்த ரயில் பாதையாகவும் 104 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொறியியல் வரலாற்றில் சவால் நிறைந்த பணியாகவும் மிசோரம் ரயில் பாதை மாறியுள்ளது.

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

மிசோரத்தில் அமையவுள்ள ரயில் நிலையத்தின் மூலம் போக்குவரத்துக்கான செலவு குறையும். பயணிகள் எண்ணிக்கையும், மிசோரத்தின் பொருளாதாரமும் உயரும். வேளாண்மை மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். ராஜ்தானி விரைவு ரயில் போன்ற தொலைதூர சேவைகளை உள்ளடக்கியதாக சாய்ராங் ரயில் நிலையம் இருக்கும் எனக் கூறியுள்ளார். சாய்ராங் ரயில் நிலையத்தை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்கு தேவையான நவீன வசதிகளையும் உள்கட்டமைப்புகளையும் உருவாக்க மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?