8000 பேருக்கு அழைப்பு... ஜூன் 9ம் தேதி 3 வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பு... !

 
மோடி

 இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதில் மோடியை 3 வது முறை பிரதமராக தேர்சு செய்ய கூட்டணிக்  கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதன்படி  நேருவிற்கு பின்னர் தொடர்ந்து 3 முறை பிரதமர் நாற்காலியில் அமரும் வாய்ப்பை மோடிதான் பெறுகிறார்.  அதே நேரத்தில் மோடி வீழ்த்த முடியாத தலைவர் என்ற பிம்பத்தில் இருந்தார். அவரது பிம்பம் உடைக்கப்பட்டு கூட்டணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மோடி

இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் பலமான கோரிக்கைகள் ஒருபுறம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பதவியேற்பு விழாவிற்கான தேதி குறிக்கப்பட்டு  ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 3 வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த தகவலை பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள  சுமார் 8000 பேருக்கு NDA கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web