மோடிக்கு ஹாட்ரிக் வெற்றி... தொடர்ந்து 3வது முறையாக பிரதமர்... நேருவின் சாதனையை சமன் செய்கிறார் மோடி!

 
மோடிக்கு ஹாட்ரிக் வெற்றி... தொடர்ந்து 3வது முறையாக பிரதமர்... நேருவின் சாதனையை சமன் செய்கிறார் மோடி!

இந்தியாவில் தேர்தல் திருவிழா உச்சக்கட்ட கொண்டாட்டத்திற்கு வந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில், தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்கிறார். 

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நேருவைத் தவிர வேறு எந்த பிரதமரும் இதுவரை தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவி ஏற்றதில்லை. இந்நிலையில், மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்க உள்ளார் மோடி. 

மோடிக்கு ஹாட்ரிக் வெற்றி... தொடர்ந்து 3வது முறையாக பிரதமர்... நேருவின் சாதனையை சமன் செய்கிறார் மோடி!

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மோடி, “தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இது இந்திய வரலாற்றில் ஒரு வரலாற்று சாதனையாகும். இதற்காக மக்களிடம் நான் தலைவணங்குகிறேன். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நற்பணிகளை நாங்கள் தொடருவோம் என உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web