மோடியின் தீபாவளி பரிசு... ஜிஎஸ்டி வரி குறைப்பு... 4 அடுக்குகளுக்கு பதிலாக 2 அடுக்குகளாக மாற்றுவதற்கு ஒப்புதல்!

 
ஜிஎஸ்டி மோடி

பிரதமர் மோடி நேற்று சுதந்திர தின உரையில்  தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி  மாற்றி அமைக்கப்படும் ஜி.எஸ்.டி.யில் 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும் என்று மத்திய அரசு உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி  5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும். 

Zomoto, swiggy  நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ஜிஎஸ்டி கவுன்சில்!

தற்போது, 12 சதவீத வரிஅடுக்கில் இருக்கும் 99 சதவீத பொருட்கள், 5 சதவீத வரிஅடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. அதுபோல், 28 சதவீத வரிஅடுக்கில் இருக்கும் 90 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகள் 18 சதவீத வரிஅடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. 

ஜிஎஸ்டி

இதுதவிர, ஆடம்பர பொருட்கள் மற்றும் பாவ பொருட்களுக்கு 40 சதவீதம் என்ற சிறப்பு அடுக்கு கொண்டுவரப்படுகிறது. புகையிலையும் 40 சதவீத வரி விதிப்பில் வரும். ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்த பிறகு இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும். வரிகுறைப்பு மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.  வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் அதை ஈடுகட்டி விடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?