3 வது முறையாக ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ’எகிப்திய அரசன்’ முகமது சாலா !
எகிப்திய நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் முகமது சாலா இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சென்ற சீசனில் முகமது சாலா 29 கோல்கள், 18 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார். இதன்மூலம், பிரீமியர் லீக்கில் அதிகமுறை (20 முறை) சாம்பியனான அணியாக லிவர்பூல் எஃப்சி மான்செஸ்டர் யுனைடெட் உடன் சமன் செய்தது.
அதே போல் பேலந்தோர் விருதுக்கான பட்டியலிலும் முகமது சாலா இடம் பிடித்துள்ளார். எகிப்திய அரசன் என கால்பந்து ரசிகர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில், பிஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை சாலா 3வது முறையாக வென்று அசத்தியுள்ளார்.
இதற்கு முன்பாக பல வீரர்கள் இந்த விருதை 2 முறை மட்டுமே வாங்கியிருக்கும் நிலையில் சாலா முதல்முறையாக 3 முறை வாங்கி சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் பாலஸ்தீன பீலே மறைவுக்கு யுஇஎஃப்ஏ-வை கண்டித்து இவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவின் எதிரொலியாக அடுத்த போட்டியில் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என பதாகையை வைத்தது குறிப்பிடத்தக்கது.முகமது சாலா மொத்தமாக 657 போட்டிகளில் 323 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
