அதிர்ச்சி! வயலுக்குள் புகுந்த 13 அடி ராட்சத மலைப்பாம்பு!

கோடை காலம் என்பதால், பூச்சிகள் போன்ற வனவிலங்குகள் இரை கிடைக்காமல், தண்ணீர் இல்லாமல் தவிப்பதால், மனிதர்கள் இருக்கும் இடங்களை தேடி அலைகின்றன. உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள இஸ்மாயில்பூர் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு வயலில், விவசாயிகள் தங்கள் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தபோது, 13 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு அருகில் உள்ள முட்புதறில் புகுந்தது.
#Uttarakhand | 13 feet giant python found in a village, rescued by the forest department in #Haridwar pic.twitter.com/Iq1nOaRPbJ
— DD News (@DDNewslive) May 7, 2024
விவசாயிகளுக்கு பாம்பு துணையாக இருந்தாலும், ராட்சத மலைப்பாம்பு அல்ல.... உணவுக்காக மாடுகளையும் ஆடுகளையும் தின்றுவிடும். இதனால் விவசாயிகள் சிலர் மிகப்பெரிய மலைப்பாம்பை கண்டு பயந்து பதறி அடித்து ஓடியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், முட்புதரில் மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக சிலர் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் 13 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை பிடிக்க கடுமையாக போராடியதாக கூறப்படுகிறது. பலத்த முயற்சிக்கு பின் மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!