நடிகை ஷில்பா ஷெட்டி மீது பணமோசடி வழக்குப்பதிவு!
ஸ்லிம் ப்யூட்டி என்று ஒரேயொரு யோகா வீடியோ மூலமாக உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தா மீது மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர்.

இந்நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர், 2015 - 2023 காலகட்டத்தில் ரூ.60.48 கோடி கொடுத்துள்ளார். அவர்கள் இருவரும் இந்தப் பணத்தை தங்களின் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாக தெரிகிறது. ராஜேஷ் ஆர்யா என்ற ஏஜென்டின் மூலம் அணுகிய ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா, 75 கோடி கடனை 12% வட்டியுடன் அணுகினர். இந்த அதிக வட்டியை தவிர்க்க, இதை 'முதலீடு' என்று மாற்றி பதிவு செய்ததாக கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன், அந்தத் தொகையை முதலீடு செய்யும்படியும் கூறியுள்ளனர்.அதனை கேட்டு, கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தவணையாக ரூ.31.95 கோடியும், 2வது தவணையாக ரூ.28.54 கோடியும் கொடுத்துள்ளார். இந்நிலையில் 2016ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
