பைக்கில் இருந்து பணத்தை தூக்கிச்சென்ற குரங்கு !
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிலப் பத்திரப் பதிவுக்காக இருசக்கர வாகனத்தில் விவசாயி வைத்துச் சென்ற பண பையை குரங்கு எடுத்துச்சென்றதால் பரபரப்பு நிலவியது.
உத்தரப் பிரதேச மாநிலம், டோண்டாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரோஹிதாஷ் சந்திரா. இவரது மகன் அனுஜ் குமார். கடந்த செவ்வாய்கிழமை இருவரும் நிலப் பத்திரப் பதிவுக்காக பிதுனா வட்டாச்சியர் அனுலுவலகம் சென்றுள்ளனர்.

ரோஹிதாஷ், தான் எடுத்து வந்த ரூ.80,000 பணத்தை பை ஒன்றில் இருசக்கர வாகனத்தில் வைத்திருக்கிறார். பின்னர் அவர் வழக்கறிஞர் கோவிந்த் துபேவுடன் வட்டாச்சியர் வளாகத்தில் பத்திரப் பதிவு தொடர்பான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த குரங்கு ஒன்று இருசக்கர வாகனத்தில் இருந்த பண பையை தூக்கிக்கொண்டு மரத்தின் மீது ஏறிவிட்டது. தொடர்ந்து அந்த குரங்கு பையில் இருந்த 500 ரூபாய் நோட்டை எடுத்து ஒவ்வொன்றாக வீசத் தொடங்கியிருக்கிறது.

இதையடுத்து, சிதறிய பணத்தை திருப்பித் தருமாறு மக்களிடம் ரோஹிதாஷ் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரால் ரூ.52,000 மட்டுமே பெற முடிந்தது. அதே நேரத்தில் ரூ. 28,000 இன்னும் காணவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அவை குரங்கால் கிழிக்கப்பட்டதோடு அங்கிருந்த மக்களாலும் எடுத்துச்செல்லப்பட்டன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
