மாதந்தோறும் ரூ. 2,000 முதலீடு.. ரூ.11.16 லட்சம் வரை பெறலாம்... பெண் குழந்தைகளுக்கான அசத்தலான திட்டம்!

 
செல்வ மகள்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த சேமிப்பாக அஞ்சலகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் இருந்து வருகிறது. பிற அனைத்து வகையான முறையான சேமிப்பு வழிகளில் அதிக வட்டியை ஈர்க்கும் திட்டமாக செல்வமகள் திட்டம் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் 2,000 ரூபாய் முதலீடு செய்து வந்தால் முதிர்ச்சியடைந்த பிறகு ரூ.11,16,815 ஆக பெற்றுக் கொள்ள முடியும். உங்கள் செல்ல மகளின் மேற்படிப்புக்கும், பாதுகாப்பிற்கும் இந்த பணம் உதவியாக இருக்கும். பெண் குழந்தைகள் 18 வயதைப் பூர்த்தி செய்யும் போது தான் சேமிப்பு பணத்தை எடுக்க முடியும். அது வரையில் அந்த சேமிப்பு வட்டியுடன் உயர்ந்து கொண்டிருக்கும்.

தற்போது இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம், பழை வட்டி விகிதமான 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்து வர வேண்டும். 21 ஆண்டுகளில் மெச்சூரிட்டி பணம் கிடைக்கும்.

Selvamagal

இந்தியாவில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். எனினும், 10 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும்.

உங்கள் மகள் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்கி மாதம் ரூ. 2,000 முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். ஆக வருடத்துக்கு மொத்தம் ரூ. 24 ஆயிரம் முதலீடு செய்கிறோம். 15 வருடங்களில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை 3.60 லட்சம் ரூபாயாகும். இப்போது, செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

Selvamagal

இந்த வட்டி விகிதத்தில் 21 வருடங்கள் கழித்து மெச்சூரிட்டியின்போது மொத்த ரூபாய் 11,16,815 கிடைக்கும். அதாவது, வட்டி வாயிலாக மட்டுமே உங்களுக்கு 7.56 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இப்போது, அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், மாதம் குறைந்தபட்சமாக ரூ. 50 செலுத்தியும் உங்களது சேமிப்பை தொடங்கலாம். இதனால், ரூ. 8 லட்சம் வரை எதிர்காலத்தில் ரிட்டன் பெற முடியும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web