ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!

 
விவசாயிகள்
 

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் பிரதமர் மோடி போட்டியிடும் பனாரஸ் தொகுதியில் அவருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய இன்று காலை கன்னியாகுமரி - பனாரஸ் விரைவு ரயிலில் முன்பதிவு செய்து தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஏறினர்.  விவசாயிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் திடீரென டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல் வந்தது. இதனையடுத்து  தங்களுக்கு இருக்கைகள் அமைத்து தர கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருக்கைகள் ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்த பின்பு ரயிலில் ஏறினர்.

விவசாயிகள்

கன்னியாகுமரி பனாரஸ் விரைவு ரயில்  செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்த நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ரயிலில்  இருந்த சக பயணிகள் விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் ஒவ்வொரு இடத்திலேயேயும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை என கூறி விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு போலீஸ்
இதனையடுத்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி - பனாரஸ் விரைவு இரயில் 1 மணி நேரம் 15-நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. அந்த ரயிலில்  அவர்களுக்காக சீட் ஏற்பாடு செய்யப்படாத நிலையில்  செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்களை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நகராட்சி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இதனால் விவசாயிகள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web