100 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்.. சிறையில் ஜிலேபி பாபா மரணம்.. அதிர்ச்சி பின்னணி!

 
ஜிலேபி பாபா

ஹரியானா மாநிலம் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகிநாத் கோயிலின் குருவாக அமர் பூரி என்ற ஜிலேபி பாபா இருந்தார். இவர் பூஜைக்கு அழைத்துச் சென்று தேநீரில் போதைப் பொருட்களைக் கலந்து மயக்கமடையச் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சில பெண்கள் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் தன் கைவரிசை காட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவரது குடியிருப்பில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருள் மற்றும் பல ஆபாச வீடியோக்கள் கிடைத்தன.

பாலியல் வன்கொடுமை, ஆபாச வீடியோக்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்தல் ஆகிய வழக்குகளில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சர்க்கரை நோய் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், குணமடைந்ததையடுத்து, மீண்டும் ஹிசார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக ஜிலேபி பாபா சிறையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். சாமியார் ஆவதற்கு முன்பு தோஹானா ரயில் நிலையம் அருகே ஜிலேபி விற்று வந்ததால் ஜிலேபி பாபா என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web