1000க்கும் மேற்பட்ட அதிமுக பொறுப்பாளர்கள் ராஜினாமா.... அதிமுகவில் செங்கோட்டையனுக்கு பெருகும் ஆதரவு!

 
செங்கோட்டையன்


அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவருக்கும் பொதுச்செயலாளர்  எடப்பாடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில்  செப்டம்பர் 6ம் தேதி  செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி   நீக்கியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும்  ஏற்பட்டது. இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிப்பாளையம், நம்பியூர், அந்தியூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,000-த்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தங்கள் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்து, தலைமைக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.  

செங்கோட்டையன்


செங்கோட்டையனுக்கு கட்சியில் ஆதரவு பெருகிவருகிறது.  செங்கோட்டையன், கட்சியில் இருந்து வெளியேறிய ஓ. பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் இணைத்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதற்கு பதிலடியாக, எடப்பாடி அவரை அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டார். இந்த முடிவை எதிர்த்து, செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், “கட்சி ஒன்றுபட்டால் மட்டுமே பதவிகளில் தொடர்வோம்” எனக் கூறி, தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.

செங்கோட்டையன்


அதன்படி மாவட்ட மகளிரணி செயலாளர் சத்தியபாமா, ஐடி பிரிவு செயலாளர் செந்தில் குமார், எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் அருள் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் கணேஷ் உள்ளிட்டோர் அடங்குவர். மேலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த சுமார் 2,000 நிர்வாகிகள் ராஜினாமா செய்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள், “செங்கோட்டையனின் நீக்கம் ஜனநாயக விரோதமானது, கட்சியை வலுப்படுத்த ஒருங்கிணைப்பு அவசியம்” என கடிதம் எழுதி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன்  “என்னை நீக்கியது குறித்து வேதனை இல்லை, ஒருங்கிணைப்பு பணி தொடரும்,” எனத்  தெரிவித்துள்ளார்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?