300க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்... கல்லூரி ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா... மாணவிகள் போராட்டம்!

 
தெலங்கானா

தெலுங்கானா மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி ஒன்றின் மாணவிகள் விடுதி பாத்ரூமில் ரகசிய கேமிரா வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 300 மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்வதாக மாணவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். 

தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரப் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவிகளின் விடுதியில் உள்ள கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியானது.இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் கல்லூரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

போலீசாரின் விசாரணையில், “கடந்த 3 மாதங்களில் மாணவிகளின் விடுதி பாத்ரூமில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு 300க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் விடுதி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது. கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறது” என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர். 

தெலங்கானா

ஆபாச படங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக அழிக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள், காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆவேசமாக கூறினர்.அதன்பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினருடன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web