3 ஆண்டுகளில் 30000 க்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பம்!

 
கர்ப்பம்

 தமிழகத்தில் லாக்டவுன் காலகட்டத்தில்  ஏராளமான குழந்தை திருமணங்கள் நடைபெற்றன. 3 ஆண்டுகளில் 30000க்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெரும்பாலும் போக்சோ வழக்குகளாக  பதிவாகவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா காலகட்டத்தில் பல்வேறு திருமணங்கள் எளிமையாகவும், ரகசியமாகவும் நடைபெற்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் இளவயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்தது.

குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தின் படி 18 வயதுக்கு குறைவான பெண்கள் மற்றும் 21 வயது குறைவான சிறுவர்கள் திருமணம் செய்வது சட்ட விரோதமானவை. கொரோனா காலகட்டத்தில் லாக்டவுனை பயன்படுத்தி குழந்தை திருமணங்கள் அதிகரித்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 3 ஆண்டுகளில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து உள்ளது. தேசியக் கூற்று ஆவண காப்பகத்தின் அறிக்கைகளும்  உறுதிப்படுத்தியுள்ளன. 3 ஆண்டுகளில் மட்டும் 30000  சிறுமிகள் கருத்தரித்து இருப்பது தெரியவந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொடங்கி தற்போது வரை 30000க்கு  மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பம் அடைந்த நிலையில்  பல வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 


2021ம் ஆண்டில் இளவயது திருமணங்கள்  அதிகரித்த நிலையில் வீட்டிலேயே இளம் வயது சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை எனத்  தெரிய வந்துள்ளது 30,000 இளம் வயது சிறுமிகள் கர்ப்பம் அடைந்த நிலையில் 13000 கோக்சோ வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.  சுகாதாரத் துறையினருக்கு போக்சோ வழக்கு குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே இச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன என   சமூக செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web