அதிர்ச்சி... பதற்றம்... அடுத்தடுத்து 400 பேர் மருத்துவமனையில் அனுமதி... வேகமெடுக்கும் மர்ம தொற்று!

 
அல்-ஷிஃபா மருத்துவமனை

மனிதன் இயற்கைக்கு எதிராக தன்னுடைய சொகுசு வாழ்க்கைப் பற்றி சிந்திக்க துவங்கிய நொடியில் இருந்தே மனித குலத்திற்கான பேரழிவு துவங்கி விட்டது. இயற்கை முன்னெப்பதும் இல்லாத அளவுக்கு மழையையும், வெயிலையும், பனியையும், குளிரையும் பல வருடங்களாகவே அதிகரித்து வருகிறது. குளிரால், மழையால், வெயிலால், வெள்ளத்தால், குடிக்க தண்ணீரே கிடைக்காததால், கொரோனா வைரஸால், பறவைக் காய்ச்சலால் என தொடர்ந்து அல்லல்பட்டு உயிரை இழந்து வருகிறோம். 

இந்நிலையில், டெல்லியில் மர்ம தொற்று காரணமாக அடுத்தடுத்து 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றது. இந்த மர்ம தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், எதனால் தொற்று ஏற்பட்டது என்று இன்னும் மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சியைத் தருகிறது. 

டெல்லியில் மர்மமான தொற்றால் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 400க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறையும் ஆராய்ச்சி செய்து வருகின்றது. டெல்லியில் காசிபாத் பகுதியில் கிட்டத்தட்ட 400 பேர் மர்ம தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சுகாதாரத்துறை விசாரணை செய்கையில் அங்கு உபயோகிக்கும் தண்ணீர் தான் என கண்டறியப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யஅங்குள்ள தண்ணீரை எடுத்து மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இவ்வாறு மக்கள் பாதிப்படைவது குறித்து அங்குள்ளவர்களிடம் கேட்டபொழுது, கழிவு நீர் தொட்டியானது கசிந்து தண்ணீரில் கலப்பதால் இவ்வாறான பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தற்பொழுது நடைபெற்று வரும் வெப்பசலானத்தாலும் இவ்வாறான தொற்றுகள் உருவாகலாம் என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு மாதிரி பரிசோதனை வரும் பொழுது தான் இந்த பாதிப்பு தொற்று எதிலிருந்து வந்தது என்பது குறித்து தெளிவான விளக்கம் தெரியகூடும். அங்குள்ள மக்களின் நலனுக்காக சுகாதாரத்துறை இந்த வாரம் அந்த பகுதியில் முகாமிட்டு அங்குள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி நிறைந்த மருந்து மாத்திரைகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web