பகீர் வீடியோ... திடீர் பூமிக்குள் புதைந்த 50 க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்தது.. புவியியல் நிபுணர்கள் ஆய்வு!

 
பூமிக்குள் நகரம்

 ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரம்பன் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இன்று திடீரென 'நிலம் மூழ்கி' பேரழிவை ஏற்படுத்தியது, அப்பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் பூமிக்குள் புதையத்துவங்கி சேதமடைந்தன. அந்த பகுதியில் சாலை இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.நிலம் மூழ்கிய சம்பவம் மாவட்டத்தில் முக்கியமான மின் கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது, நான்கு மின் கோபுரங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த வியாழனன்று மாலை, வீடுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியதும், திடீரென அந்த கிராமத்தில் நிலம் மூழ்கியதைத் தொடர்ந்து கூல் மற்றும் ரம்பன் இடையேயான சாலை இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அந்த கிராமத்தில் இருந்த பல குடும்பங்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். 

ராம்பன் துணை ஆணையர் பசீர்-உல்-ஹக் சவுத்ரி மாவட்டத் தலைமையகத்திலிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள குறிப்பிட்ட கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதற்கு உறுதியளித்தார்."இது ஒரு இயற்கை பேரழிவு என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தலைவர் ஷம்ஷாத் ஷான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிலம் மூழ்கியதற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் புவியியல் நிபுணர்களை வரவழைத்துள்ளனர், அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதை மேற்பார்வையிட மாவட்ட அதிகாரிகள் குழு 24 மணிநேரமும் நிறுத்தப்பட்டுள்ளது.


"நிலம் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கிறது.சாலை மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதே எங்கள் முதல் முன்னுரிமை. நாங்கள் கூடாரங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்குவோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம்களையும் ஏற்பாடு செய்வோம்" என்று துணை ஆணையர் கூறினார். உள்ளூர் தன்னார்வலர்கள் SDRF மற்றும் NDRF குழுக்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உடைமைகளை சேதமடைந்த வீடுகளில் இருந்து நகர்த்த உதவினார்கள். இதற்கிடையில், கூல் துணைப் பிரிவை மாவட்டத் தலைமையகத்துடன் இணைக்க, சம்பர்-டிக்டோல் வழியாக மாற்றுச் சாலை இயக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்இதேபோன்ற சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சங்கல்டன் பகுதியில் உள்ள துக்சர் தல்வா கிராமத்தில் நிலம் மூழ்கியதால் 16 வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web