90க்கும் மேற்பட்ட மாணவர்கள்... சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து! 15 பேர் படுகாயம்!

 
சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று, 90க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு 2 பேருந்துகளில் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது  ஒரு பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

இந்த விபத்து நேர்ந்த போது பேருந்தினுள் தூங்கிக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்தப்படி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் 3ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் மற்றும் 2 ஆசிரியைகள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கானாவிளக்கு காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அதன் பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய போலீசார், பேருந்தை இயக்கிய ஓட்டுனர் தூங்கிவிட்டதால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். 

பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web