கொண்டாட்டம் ஆரம்பம்... ஒரே நாளில் ரூ4 கோடிக்கும் மேல் ஆடு விற்பனை...!!

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே மீதம் உள்ளன. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் புத்தாடை, பட்டாசுகள் என ஒரு பக்கம் ஷாப்பிங் பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. மதுரை திருமங்கலம் ஆட்டு சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு மேலாக ஆடு விற்பனை ஆகியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் பெருநகர பகுதிகளில் மிகப்பெரிய ஆட்டுச் சந்தையாக கருதக்கூடிய திருமங்கலத்தில் உள்ள சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஆடு விற்பனை சூடுபிடிக்க தொடங்கும்
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக 10 நாட்களுக்கு முன்பே ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.இந்த ஆட்டு சந்தையில் மதுரை , திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 5 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட ஆடுகள் வரை விற்பனைக்கு உள்ளன.
அவை சுமார் ரூ. 15,000 ஆடுகள் முதல் ரூ. 35,000 ஆடுகள் வரை இந்த ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான விவசாயிகள் மற்றும் ஆட்டுகிடை விற்பனையாளர்கள் பெரும் அளவில் வாங்கி செல்கின்றனர். அசைவ பிரியர்களும் இன்று முதலே வாடிக்கையாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு ஆடுகளை வாங்கி செல்லுகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!