இன்று தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம்!

 
பத்திரப்பதிவு

இன்று ஜூலை 7ம் தேதி, சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் பொதுமக்களின் வசதிக்காக இன்று கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகிறது.

பத்திரப்பதிவு

சுபமுகூர்த்த நாள்களில் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும்  அன்றைய தினங்களில் ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் பத்திரப்பதிவுத் துறையால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சார் பதிவாளர் பத்திரப்பதிவு ரிஜிஸ்டர் அலுவலகம்

அந்த வகையில் இன்று ஜூலை 7 ம் தேதி சுபமுகூர்த்த நாள் என்பதால் அன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஒரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு 150 முன்பதிவு வில்லைகள், 2 சார்பதிவாளர் அலுவலகத்துக்கு 300 முன்பதிவு வில்லைகள் மற்றும் அதிக அளவு பத்திரப் பதிவு நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?