தமிழகம் முழுவதும் செப்.4ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!
செப்டம்பர் 4ம் தேதி சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க செப்டம்பர் 4ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 முன்பதிவு டோக்கன்கள் மற்றும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
