உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள்... அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக, அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், ஜூலை 7 ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்கள் குறித்து அதிபர் டிரம்ப் “ ரஷியாவால் அதிக பாதிப்புகளை உக்ரைன் சந்தித்துள்ளதாகக் கூறினார்.

அத்துடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும், உக்ரைனின் தற்காப்பிற்காகக் கூடுதல் ஆயுதங்கள் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.முன்னதாக, உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப்பால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரஷியாவின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் உக்ரைன் பலத்த சேதாரங்களைச் சந்தித்து வந்தது.

இந்தத் தாக்குதல்களில் ரஷிய ராணுவம் ஈரானின் ஷாஹெத் ட்ரோன்களை பயன்படுத்தியதாக உக்ரைன் கூறுகிறது.இதனைத் தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போரில், உக்ரைனின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ளது. ரஷியாவின் அறிவிப்பு வெளியான அதே சமயத்தில், அதிபர் ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
