உஷார்... அடுத்த 5 நாட்களும் காலையில் வறுத்தெடுக்க போகும் வெயில்! மாலையில் மழைச்சாரல்!

 
வெயில் , மழை

தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கியது முதல்  வெயில் கொளுத்தி வருகிறது. இடையில் பெய்த கோடை மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக  வெயில் 18பகுதிகளில் 100 பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயில் மழை

இந்நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக  அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21 முதல்  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மே  22 முதல் 23 ம் தேதி வரை தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.

மழை


சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக  38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மே 22 மற்றும் 23 தேதிகளில்  மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  இதனையடுத்து இந்த பகுதிகளில்   மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web