ஒரே ஓவரில் அதிக ரன்கள்... உலக சாதனைப் படைத்த ஆப்கானிஸ்தான் வீரர்!

 
உஸ்மான் கிரிக்கெட் ஆப்கானிஸ்தான் அதிக ரன்கள்

ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் உஸ்மான் கானி உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இ.சி.எஸ். 10 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் லண்டன் கவுண்டி - கில்ட்போர்ட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த லண்டன் கவுண்டி அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் குவித்தது. 28 பந்துகளில் சதத்தை எட்டிய லண்டன் கவுண்டி அணி வீரர் உஸ்மான் கானி (ஆப்கானிஸ்தான்) 11 பவுண்டரி 17 சிக்சர்களுடன் 153 ரன்கள் குவித்து அசத்தினார்.

ருதுராஜ் ஆர்சிபி

முன்னதாக அவர் வில் ஜர்னி வீசிய ஒரே ஓவரில் 45 ரன்கள் திரட்டி புதிய சாதனை படைத்தார். ஒரு வைடு, 2 நோ பால் உட்பட 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் இந்த ரன்கள் கிடைத்துள்ளன. 

இதற்கு முன்பு 2022ம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 43 ரன்கள் எடுத்ததே ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது கெய்க்வாட்டின் சாதனையை தகர்த்து உஸ்மான் கானி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

கிரிக்கெட்

உஸ்மான் கானி ஒரே ஓவரில்  5 சிக்சர்கள் (30 ரன்கள்), 3 பவுண்டரிகள் (12 ரன்கள்), 2 நோபால்கள் ( 2 ரன்), ஒரு வைடு (ஒரு ரன்) என குவித்துள்ளார். பின்னர் ஆடிய கில்ட்போர்ட் அணியால் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் லண்டன் கவுண்டி அணி 71 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?