தாயும், மகளும் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் அலட்சியத்தால் விபரீதம்...!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி உங்கட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கட்ராமப்பா. இவரது மனைவி மீனாட்சி . இவர்களுக்கு கிரி என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்தனர். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிரி ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரி செப்டம்பர் 7ம் தேதி உயிரிழந்தார்.
இதனால் அவருடைய தாய் மீனாட்சி, சகோதரி காவியா இருவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். அதே நேரத்தில் கிரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களிடம் கூறி வந்தனர். இதன் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. கிரி இறந்ததை ஏற்று கொள்ள முடியாமல் தாய், தங்கை இருவரும் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. வெங்கட்ராமப்பா வெளியே சென்று இருந்த போது வீட்டில் மீனாட்சி, காவியா தனியாக இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து வெங்கட்ராமப்பா வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரிடம் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு மனைவி, மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தாயும், சகோதரியும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் 2 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் எனக் கூறினர்.
இதைத்தொடர்ந்து உறவினர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். அதன்பிறகு 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் காவியா உருக்கமாக 2 பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மகன் பலியான நிலையில் வேதனையில் தாயும், தங்கையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!