கார் விபத்தில் தாயும், மகனும் துடிதுடித்து பலி... தந்தை கவலைக்கிடம்!

 
தாய் மகன்

திருப்பதிக்கு சென்று, தரிசனம் முடித்து விட்டு, திரும்பிய போது கார் விபத்திற்குள்ளானதில், தாயும், மகனும் துடிதுடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தந்தை படுகாயமடைந்த நிலையில் கவலைக்கிடமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

விபத்து

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஸ்வரராவ் . இவருடைய மனைவி 38 வயது பத்மாவதி. ஜஸ்வந்த் ஜாய் என்ற மகனும் இருந்துள்ளனர். இவரது சகோதரி ஹேமலதா. இவர்கள் 4 பேரும் காரில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் திருவண்ணாமலைக்கு அருணாச்சலேஸ்வரர் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

விபத்து

காரை வெங்கடேஸ்வரராவ் ஓட்டி சென்ற நிலையில் கோவிலில் இருந்து இவர்கள் கிளம்பி சென்ற போது திருப்பதி அருகே கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பத்மாவதியும் அவரது மகனும் உயிரிழந்தனர். இந்நிலையில் மற்ற 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?