புனே கார் விபத்தில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய தாயார்... திடுக்கிடும் தகவல்கள்!

 
ஷிவானி அகர்வால்

 புனேவில் 12ம் வகுப்பில் பாஸ் செய்ததை கொண்டாட  17 வயது சிறுவன் நண்பர்களுடன் பப்புக்கு சென்றிருந்தான். இதனையடுத்து போதையில் காரை ஓட்டியதில் 2  ஐடி ஊழியர்கள் பலியாகினர்.  இந்த வழக்கில் கைதான சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத பிறகு அவருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்த வழக்கில் டிரைவரை கட்டாயப்படுத்தி காவல் நிலையத்தில் சரணடைய வைத்தனர். இதற்காக  சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா இருவரும்  அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

 புனே விபத்து

இந்நிலையில் சிறுவன் சம்பவ நாளில் 2 பார்களில் இருந்து குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருடைய ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.ஆனால் அந்த ரத்த மாதிரிகளை குப்பையில் வீசிவிட்டு போலியான மருத்துவ சான்று கொடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இந்த போலிச்சான்று அளித்த சசூன் மருத்துவமனை மருத்துவர்களான அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரிஹர்ணர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  தற்போது சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி கொடுத்தது அவருடைய தாயார் ஷிவானி அகர்வால் தான்  என்பது  தெரிய வந்துள்ளது. அதாவது ஷிவானி தன் மகனுக்கு பதிலாக தன்னுடைய ரத்த மாதிரியை கொடுத்து தன்மகன் மது அருந்தவில்லை என நிரூபணம் செய்துள்ளார். ஷிவானியை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  கார் விபத்தில் இரு ஐடி ஊழியர்கள் பலியான நிலையில் சிறுவனைக் காப்பாற்ற மொத்த குடும்பமும்  பணபலத்தால் ஆட்களை விலைக்கு வாங்கியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web