நாளை அன்னை திருவிழா கொடியேற்றம்!!

 
வேளாங்கண்ணி மாதா

இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா நாளை  மே 12ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 21ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறை மாவட்டம் வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அன்னை

நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடைபெற உள்ளது. கொடியேற்று விழாவுக்கு அருட்பணியாளர் டைனீஷியஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஆன்சன் மறையுரை ஆற்றுகிறார். உத்திரபிரதேசம் மாநிலம் பரேலி மறை மாவட்டத்தில்  ஆயர் இக்னேஷியஸ் டிசூசா திருவிழா கொடியை ஏற்றிவைக்கிறார். விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி ஆண்டுவிழா, கலை நிகழ்ச்சிகள்  நடைபெற உள்ளது.

அன்னை

 விழாவின் 9ம் நாளான 20ம் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனை நிறைவேற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான மே21ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு அருட்பணியாளர் அலாய்சியஸ் தலைமை தாங்கி திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் கிளாசின் மறையுரை ஆற்ற உள்ளார்.  மாலை 6 மணிக்கு திருப்பலி, கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு சகாய அன்னை இளைஞர்கள் இயக்கம் நடத்தும் சிறப்பு கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web