இரட்டை பெண் குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு வாழ்நாள் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
கள்ளக்காதல் குழந்தை கொலை மாணவி இளம்பெண்
 

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கால்வாயில் வீசி கொலை செய்த தாய்க்கு வாழ்நால் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாநிலத்தில் இரட்டைக் குழந்தைகளை கால்வாயில் வீசி கொலை செய்த தாய்க்கு, சிசிடிவி  காட்சிகளின் அடிப்படையில் நீதிமன்றம் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கி, ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது.

குழந்தை வாயில் டேப்

கடந்த 2021ல் மண்டிக்குச் செல்லும் பாதையில் உள்ள ஸ்கொடி கால்வாயில் இரட்டைக் குழந்தைகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இரண்டும் பெண் குழந்தைகளாகும். இந்த குழந்தைகளை கொலை செய்து வீசியது யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் குழந்தைகளை தூக்கி வீசும் காட்சியை பார்த்து அதிர்ந்தனர். மேலும், அருகில் உள்ள மற்ற சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ரோஹினா என் பெண்தான் குழந்தைகளை கொலை செய்து வீசியவர் என்பதை கண்டுபிடித்தனர். மேலும், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அதை உறுதிப்படுத்தினர்.

குழந்தை

அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரோஹினா தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறி, மற்றொரு நபருடன் ஜலந்தரில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஆனால், மண்டியில் உள்ள அவரது முன்னாள் கணவர் வீட்டிற்கு வரும்போது, புதிதாக பிறந்த குழந்தைகள் இல்லாமல் வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளிக்க, குழந்தைகளை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?