செல்போனை பயன்படுத்தியதால் திட்டிய தாய்.. விரக்தியில் நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு!

 
அக்ஷயா

குமரி மாவட்டம் பூதப்பாண்டி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு அக்ஷயா (வயது 19) என்ற மகனும், மகளும் இருந்தனர். மகன் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். மகள் அக்ஷயா திடல் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அக்ஷயா தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். வீட்டில் செல்போனில் மூழ்கி இருந்ததாக தெரிகிறது.

செல்போன்

இதை கவனித்த அவரது தாய் நிர்மலா அவருக்கு அறிவுரை கூறி கண்டித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அக்ஷயா செல்போனை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்ததால் நிர்மலா திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அக்ஷயா , விட்டில் உள்ள அறைக்கு சென்று திடீரென விஷம் குடித்தார். சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்ற நிர்மலா அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு அக்ஷயா மயங்கி கிடந்து உயிருக்கு போராடினார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அக்ஷயா பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட நேரம் செல்போனை பார்த்த தாய் கண்டித்ததால் நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web