திருவிழா நாளில் மாமியார் படுகொலை... மனைவியையும் அரிவாளால் வெட்டிய கொடூரம்!

 
கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இடம்பெற்ற பயங்கர சம்பவத்தில், குடும்ப தகராறில் கோபமடைந்த மருமகன், மாமியாரை கொலை செய்து, மனைவியையும் அரிவாளால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொய்கை கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் தனியார் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். குடிப்பழக்கம் காரணமாக மனைவி காளீஸ்வரியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கொலை

சண்டை தீவிரமானதால், காளீஸ்வரி குழந்தைகளுடன் ஊத்துமலைக்கு தாய் வீடு சென்றார். அங்கு கோவில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில், பாலசுப்பிரமணியன் திருவிழாவில் கலந்து கொண்ட பிறகு மனைவியையும் பிள்ளைகளையும் தன்னுடன் அனுப்புமாறு மாமியார் கருத்ததுரைச்சியிடம் கோரினார். ஆனால் அவர் மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அன்று கோபத்தின் காரணமாக அங்கிருந்து சென்ற பாலசுப்பிரமணியன், மறுநாள் அதிகாலையில் மீண்டும் மனைவியின் வீட்டிற்கு வந்து, கொண்டுவந்த அரிவாளால் மாமியார் கருத்ததுரைச்சி மற்றும் மனைவி காளீஸ்வரியை கொடூரமாக வெட்டினார். இரத்தக்குளத்தில் கிடந்த இருவரையும் உறவினர்கள் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கருத்ததுரைச்சி மருத்துவமனையில் உயிரிழந்தார். காளீஸ்வரிக்கு முதுதவி வழங்கப்பட்டு பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கொலை

குடும்ப தகராறு உயிர்ப்பலி எடுத்து, திருவிழா கொண்டாட்டம் சோகத்தில் முடிந்ததோடு, ஊத்துமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க