வாகன ஓட்டிகளே உஷார்.. வெடித்து சிதறிய புளூடூத் ஸ்பீக்கர்.. தீக்கிரையான சொகுசு கார்!

 
வெங்கடேசன்

சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (57). இவர் கார் கண்ணாடி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கோவிலுக்கு செல்வதற்காக காரை எடுத்து ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த புளூடூத் ஸ்பீக்கர் பயங்கர சத்ததுடன் திடீரென வெடித்து புகை வெளியேறியது.

இதனால், கார் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதை அடுத்து அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உடனடியாக கீழே இறங்கி தப்பினார். இது குறித்து சூரமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனே தீயை அணைக்த்தனர்.

இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் வெங்கடேசனின் நெற்றி, காது, கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web