மலை, கடல், தண்ணீர் மாநாடு... கெத்து காட்டும் சீமான்
சமூகநீதிப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
செய்தியாளர்களுடன் பேசுகையில், அடுத்ததாக மலை, கடல் மற்றும் தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “ திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது குறித்த கேள்விக்கு; படிக்கும் குழந்தைகளின் பள்ளிக்கு விடுமுறையை அறிவித்து விட்டு, உங்களுடன் முதல்வர் முகாமை நடத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. சிவகங்கையில் மனுக்களை வாங்கிக் கொண்டு சாக்கடை குழியில் போட்டு விட்டு சென்றீர்கள். இது மாதிரியான கொடுமைகளை செய்வதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி. இது போல இன்னும் நடக்கும்.

திமுகவைப் போல பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. பாஜவின் அனைத்து கொள்கைகளிலும் ஒத்துப் போய் ஒரு மாநில ஆட்சி நடக்கிறது என்றால், அது திமுக ஆட்சி தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதல்முறையாக பேரணி நடத்தியதே நம் முதல்வர் தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து உலக நாடுகளுக்கு சென்று பேசியது கனிமொழி தான்.

அன்று பாஜ கூட்டணியில் இருந்தாங்க. இன்று காங்கிரஸோடு இருக்காங்க. அரசியல் தேவை லாபத்திற்காக பேசுவது. நாங்க பாசிசம், மதவாதத்திற்கு திமுக எதிரானது என்று எதை வைத்து சொல்வீர்கள். குஜராத் கலவரத்தை கருணாநிதி ஆதரித்தார். அது ஒரு மாநில பிரச்னை, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றார். இப்ப கூட்டணியில் இல்லாததால், மணிப்பூர் கலவரத்தை எதிர்க்கிறீர்கள். அனைத்து வழிகளிலும் நட்போடு இருக்கிறார்கள்” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
