பயங்கரம்... சினிமா பாணியில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி படுகொலை!

 
செந்தில் ஆறுமுகம் செந்தில் ஆறுமுகம்

 தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவில் வசித்து வருபவர்  செந்தில் ஆறுமுகம். இவர் வழக்கறிஞராகவும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். இவர் அதே பகுதியில்  மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது தங்கை கணவரான கோவில்பட்டியில் வசித்து வரும் கோபிநாதன் என்பவருக்கும் சொத்து தகராறு  இருந்து வந்தது.  

செந்தில் ஆறுமுகம்


இந்நிலையில் செந்தில்குமார் நேற்றிரவு   மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில் ஆறுமுகம்  தப்பிக்க முயற்சித்துள்ளார். அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது. 
இச்சம்பவம் குறித்து  அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ்

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செந்தில் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் சொத்து தகராறுக்காக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் தொழில் பிரச்சனை காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!