நீ...ண்ட வருடங்களுக்கு பிறகு முக அழகிரியும், ஸ்டாலினும் இணைந்து புகைப்படம்!

 
அழகிரி ஸ்டாலின்

 

தமிழக முதல்வர்  ஸ்டாலினின் சகோதரர் முக. அழகிரி. இவருடைய மகன்   துரை தயாநிதி உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனைத்  தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அங்கு சிகிச்சை தொடர்கிறது.  அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  கடந்த மாதம் அவரை  ஸ்டாலின் மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்தார். 

அழகிரி ஸ்டாலின்


இந்நிலையில்  துரை தயாநிதி சந்தித்து நலம் விசாரிக்க மீண்டும் 2வது முறையாக முதல்வர்  வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.  துரை தயாநிதி  உடல்நலம்  குறித்து விசாரித்த முதல்வர் அங்கு  அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் துரை தயாநிதி உடன் இருந்த மு.க. அழகிரி  முதல்வருடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு புகைப்படம் எடுத்துக் கொண்டார் . நீண்ட வருடங்களுக்கு பின் இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டனர். இச்சம்பவம் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web