ரூ.20 கோடி கேட்டு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... மும்பையில் பரபரப்பு!

 
முகேஷ் அம்பானி

ரூ.20 கோடி கேட்டு, இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இ-மெயில் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இந்த கொலை மிரட்டல் தொழிலதிபர்கள் மத்தியில் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு தற்போது இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10 என்.எஸ்.ஜி கமாண்டோகள் உட்பட 55 பாதுகாப்பு பணியாளர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முகேஷ் அம்பானிக்கு , ரூ. 20 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு மெயில் ஒன்றில் மிரட்டல் விடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

குடும்பத்தினருடன் முகேஷ் அம்பானி

அந்த இ மெயிலில், ”20 கோடி ரூபாயை தராவிட்டால் உங்களை கொன்று விடுவோம், எங்களிடம் இந்தியாவிலேயே சிறந்த துப்பாக்கி சுடுபவர்கள் இருக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் முகேஷ் அம்பானி

இந்த இ மெயில் மூலமான கொலை மிரட்டல் குறித்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web