திருப்பதியில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்!
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
அவருடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான வெங்கையா சௌத்ரியும் கலந்து கொண்டார். அதிகாலை விசேஷ நேரத்தில் கோயில் அதிகாரிகள் வழிகாட்டுதலுடன் சாமி தரிசனம் செய்த அம்பானிக்கு, தரிசனத்திற்குப் பிறகு கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. வேத பண்டிதர்கள் சந்திப்பு நடைபெற்று, ஆசீர்வாதம் வழங்கினர்.

தரிசனத்திற்குப் பின் தேவஸ்தான அதிகாரிகள், தற்போது கோயிலில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி பணிகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் பக்தர்களுக்கான புதிய ஏற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

முகேஷ் அம்பானி ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருக்கோவிலுக்கு வருவது வழக்கம். இவ்வாண்டும் அந்த மரபின்படி தரிசனம் மேற்கொண்டதாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
