Multibagger stock : இந்த மைக்ரோ கேப் நிறுவனத்தின் ஷேர்கள் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் 15 சதவீதம் உயர்ந்தது!

 
ஸ்பெக்ட்ரா

வெள்ளியன்று, பி.எஸ்.இயில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களில் ஒன்றான, ப்ரீவெஸ்ட் டென்ப்ரோ லிமிடெட் (Prevest Denpro Ltd )பங்குகள் 15 சதவிகிதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை ரூபாய் 410.45க்கு உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில், 12.90 சதவிகிதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை ரூபாய் 403.80 ஆக இருந்தது.

இந்நிறுவனம் அதன் காலாண்டு முடிவுகள் மற்றும் வருடாந்திர முடிவுகளை அறிவித்ததால், நிறுவனத்தின் பங்குகள் தொடக்கத்திற்கு முந்தைய நாள் அமர்வில் இருந்து அதிக வாங்குதலைக் கண்டன.

ஸ்பெக்ட்ரா டெண்டிஸ்ட்ரி

Q4FY23க்கான நிதிச் சிறப்பம்சங்கள் : 

மொத்த வருவாய் ரூபாய் 14.10 கோடியாகவும் , இது Q4FY22 ஐ விட 39 சதவிகிதம் அதிகமாகவும் இருந்தது. ரூபாய் 5.58 கோடி EBITDAவாக இருந்தது, இது  Q4FY22 ஐ விட 60 சதவிகிதம் அதிகம், வரிக்குப்பிந்தைய லாபம் ரூபாய் 5.10 கோடி, Q4FY22ஐ விட 107 சதவிகிதம் அதிகம், ஒரு பங்கின் EPS ரூபாய் 4.26, இது Q4FY22 உடன் ஒப்பிடும்போது இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறது.

FY23க்கான நிதி சிறப்பம்சங்கள் :

மொத்த வருவாய் ரூபாய் 51.88 கோடி, FY22ஐ விட 30 சதவிகிதம் அதிகம், 20.95 கோடி EBITDA, FY22 ஐ விட 30.55 சதவிகிதம்  அதிகமாகும், வரிக்குப்பிந்தைய லாபம் ரூபாய் 15.71 கோடி, FY22ஐ விட இது 36 சதவிகிதம் அதிகம், ஒரு பங்குக்கு ரூபாய் 13.09 EPS, FY22ஐ விட 35.80 சதவிகிதம் அதிகம்.

ஸ்பெக்ட்ரா

ப்ரீவெஸ்ட் டென்ப்ரோ லிமிடெட் என்பது பல்வேறு நோய்களைக் கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் பல் பொருட்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. நிறுவனம் பெரிதும் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. இந்த மைக்ரோ கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூபாய் 483.72 கோடியாக உள்ளது. பங்கு 26 சதவிகிதம் ROE மற்றும் 32 சதவிகிதம் ROCE ஐக் கொண்டுள்ளது. இந்த பங்கு 3 ஆண்டுகளில் 117.75 சதவிகிதம் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது. முதலீட்டாளர்கள் இந்தப்பங்கின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

From around the web